2011- ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

விழாக்கள் விசேஷங்கள்

புத்தாண்டு பலன்கள் – 2011

https://www.dinamani.com/edition/astview.aspx?sid=newyear&ast=4

gurupeyarchi 4 katakamகடகம் :

நாளை முதல்,​​ ஏப்ரல் மாதம் வரை உங்களின் ஆற்றல் பன்மடங்கு பெருகும்.​ நண்பர்களுக்கும்,​​ கூட்டாளிகளுக்கும் அறிவுரை கூறுவீர்கள்.​ அவர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.​ போட்டி,​​ பொறாமைகள் இருக்காது.​ அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.​ சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தும்,​​ கெüரவமும் உயரும்.​ பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.​ புதிய வீடு,​​ வாகனங்களை வாங்குவீர்கள்.​ குழந்தை இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​

இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான் உங்களை ‘முக்கியஸ்தர்’ என்கிற அளவுக்கு உயர்த்துவார்.​ வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.​ சிலர் பகுதி நேரமாக மற்றொரு தொழிலையும் செய்யத் தொடங்குவார்கள்.​ வாழ்க்கையில் அனுகூலமான பல திருப்பங்களைக் காண்பீர்கள்.

கேது பகவானால் புண்ணியத் தலங்களுக்கு செல்லும் யோகம் உண்டாகும்.​ ​ சகோதர,​​ சகோதரிகள் உங்களைத் தேடி வந்து உதவி செய்வார்கள்.​ நுணுக்கமான பல கலைகளைக் கற்றுத் தேர்வீர்கள்.​ இரவு நேர சிறு தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

இந்த ஆண்டு மே மாதம் முதல்,​​ வருட இறுதி வரையிலான காலகட்டத்தில் தொழில் செய்ய வங்கிகளிடமிருந்தும் பழைய நண்பர்களிடமிருந்தும் பண உதவி கிடைக்கும்.​ தாய் வழி உறவுகளிடமிருந்து குறிப்பாக மாமன் வழியிலிருந்து நன்மை அடைவீர்கள்.​ சிலர் தொழிலை மற்ற ஊர்களிலும் விரிவுபடுத்துவார்கள்.​ எதிர்பாராத பண வரவால் திக்குமுக்காடிப் போவீர்கள்.​ புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.​ ​

லாபஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேது பகவான்,​​ அனைத்துக் காரியங்களிலும் உபரி வருமானத்தைக் கூட்டிக் கொடுப்பார்.​ குல தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரங்களைச் செய்வீர்கள்.​ சகோதர,​​ சகோதரிகள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.​ பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் சுமுகமான தீர்வு உண்டாகும்.

இந்தக் காலகட்டத்தில் ராகு பகவான்,​​ உங்களை முன் யோசனையோடு செயல்பட வைப்பார்.​ தனித்துச் செய்யும் காரியங்களில் நன்மை உண்டாகும்.​ அதேசமயம் பெற்றோர் வழியில் சிறு மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.​ உங்கள் பெயரில் பிறருக்குக் கடன் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்கவும்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு குறையும்.​ உங்கள் மேலதிகாரிகளின் மனநிலை அறிந்து சமயோஜிதமாக நடந்து கொள்வீர்கள்.​ சிறிய அளவு முயற்சிகளிலேயே நிறைவான வெற்றிகளை அடைவீர்கள்.​ உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால்,​​ சில குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம்.​ சக ஊழியர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள்.​ அதனால் அவர்களை நம்பி முக்கிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.

வியாபாரிகள்,​​ துணிந்து புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.​ இதனால் வருமானம் இரட்டிப்பாகும்.​ விநியோக விவகாரம் உட்பட அனைத்து விஷயங்களும் உங்களுக்குச் சாதகமாகவே முடியும்.​ கொடுத்திருந்த கடன்களும் திரும்பக் கை வந்து சேரும்.​ வியாபாரத்தை நல்ல முறையில் விரிவுபடுத்துவீர்கள்.​ நண்பர்களும் உதவி செய்வார்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.​ இதனால் சந்தை வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.​ அதோடு செலவு குறைந்த மாற்றுப் பயிர்களையும் பயிரிட்டு லாபத்தை அள்ளுவீர்கள்.​ உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் மேலும் நன்மைகள் அடையலாம்.​ வயல் வரப்பு பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு,​​ தீர்க்கமாக யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும்.​ இருப்பினும் கட்சியில் யாரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம்.​ மக்களுக்கான நியாயமான போராட்டங்களில் மட்டுமே ஈடுபடவும்.​ மற்றபடி புதிய பொறுப்புகளைக் கவனத்துடன் கையாளுவீர்கள்;​ கட்சிப் பணிகளை புதிய யுக்தியுடன் செய்வீர்கள்.

கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும்.​ புதிய வாய்ப்புகள் தேடி வரும்.​ உங்களுக்கென்று தனி இடத்தைப் பிடிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.​ உங்களின் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்து வரவேற்புகளைப் பெறும்.​ வெளிநாட்டுப் பயணங்களை ரசிகர்களின் ஆதரவுடன் மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.​ பண வரவு நன்றாக இருக்கும்.​ மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.​ குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள்.​ ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.​ தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.​ பழைய கசப்பான சம்பவங்களை மறந்து,​​ இன்பமாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

மாணவமணிகள்,​​ கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.​ விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றியடைவீர்கள்.​ சோம்பேறித்தனத்தை விட்டொழித்து இந்த ஆண்டு முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.​ அனைத்து இடையூறுகளையும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவினால் தாண்டி வந்துவிடுவீர்கள்.

பரிகாரம் : ராமர்,​​ சீதா,​​ லட்​சுமணர்,​​ அனுமனை வழிபட்டு வரவும்.

Leave a Reply