சூரியாஷ்டகம் Sri Suryashtakam

ஸ்தோத்திரங்கள்

ஸ்ரீ சூர்யாஷ்டகம்

ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர|
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே||

(ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா! ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்)

ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்|
ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(ஏழு (வானவில்லின் வண்ணம் போல் ஏழு) குதிரைகள் பூட்டிய தேரில் இருப்பவரே… வெப்பம் நிறைந்தவரே… ரிஷி கச்யபரின் குமாரரே… வெண் தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(சிவப்பு நிறத் தேரில் ஏறி உலா வருபவரே… அனைத்து உலகங்களுக்கும் தந்தையே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேச்வரம்|
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என மூன்று குணங்களை உடையவரே… பலம் பொருந்திய மஹாசூரரே… ப்ரஹ்மா விஷ்ணு சிவனார் இவர் மூவரின் அம்சமும் பொருந்தியவரே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)  

ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச|
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(வளர்ந்துகொண்டே இருக்கும் தேஜஸ்ஸாகிய ஒளி கொண்டவரே… வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே… உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்|
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே… மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் பொருந்தியவராகத் திகழ்பவரே… ஒரே சக்கரத்தைக் கொண்டவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே… தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே… எம் பாவம் அறுத்து பாவனமாக்குபவரே… சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்)

தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்|
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்||

(உலகின் நாதனே… ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே… எம் பாவத்தை அறுத்து பாவனமாக்குபவரே… ஹே சூரிய தேவனே… உம்மை வணங்குகிறேன்)

இதி ஸ்ரீ சிவப்ரோக்தம் ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்

(இவ்வாறு சிவபெருமானால் உரைக்கப்பட்ட சூர்யாஷ்டகம் நிறைவு பெறுகிறது)

தமிழாக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்