பெரியவாச்சான் பிள்ளையின் பாசுரப்படி சுந்தர காண்டம்

ஸ்தோத்திரங்கள்

பெரியவாச்சான்பிள்ளைஇந்த நாலாயிரத் திவ்யபிரபந்ததிலே, உள்ள வாக்கியங்களையே பொறுக்கிக் கோத்த மணி மாலையாக இவர் செய்திருக்கும் ” பாசுரப்படி இராமாயணம் ”, அன்பர்கள் படிப்பதற்கும், பக்தி செய்வதற்கும் ஏதுவாக விளங்குகிறது.

இராமாயண மகா காவியத்தை முழுவதும் படிக்க இயலாதோர், அதன் சாரமாய் விளங்கும் இந்த பாசுரப்படி இராமாயணத்தை படித்தால், இராமாயண காண்டம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிட்டும். அதிலும் ஸ்ரீ ஆஞ்சநேயரின் சரித்திரத்தைக் கூறும் சுந்தரகாண்டத்தைப் படிப்போர்கள், வாழ்வில் சகல வளங்களையும் பெறுவார்கள் என்பது திண்ணம்.

இனி, ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை பாசுரப்படி சுந்தரகாண்டத்தை வாசியுங்கள் !

மாற்றங்கள் வர,வர ஸ்ரீ அனுமனை யோசியுங்கள் !

யோசித்துப் பின், அனுதினமும் அனுமனை நேசியுங்கள்!

“சீராரும் திறலனுமன் மாகடலைக் கடந்தேறி
மும்மதிள் நீளிலங்கை புக்குக்கடி காவில்
வாராரும் முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு
நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லிய தோதினிதிருக்க
மல்லிகை மாமாலை கொண்டாங் கார்த்ததுவும்
கலக்கியமா மனத்தினளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கியமா மனத்தினனாய் மன்னவனும் மறாதொழிய
‘குலக்குமரா ! காடு உறையப்போ ‘ என்று விடைகொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூர் அணிந்த வேலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்.
சித்திரகூடத்து இருப்பப் பரத நம்பி பணிந்ததுவும்.
சிறு காக்கை முலைதீண்ட அனைத்துலகம் திரிந்து ஓடி
‘ வித்தகனே ! ராமவோ நின் அபயம் !’ என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்.
பொன் ஒத்த மான் ஓன்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குவன் பிரிந்ததுவும்
‘ அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்.
‘ ஈது அவன் கை மோதிரமே’ என்று
அடையாளம் தெரிந்து உரைக்க
மலர்க் குழலாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் கை வைத்து உகக்க,
திறள் விளங்கு மாருதியும்,
இலங்கையர் கோன் மாக்கடிக்காவை இறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து, மீண்டும் அன்பினால்,
அயோத்தியர் கோன் தளிர் புறையும் அடி இணைப்பணிய”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *