இந்த பூஜையை கண்டால் உங்கள் வாழ்வில் திருப்பம் நிச்சயம்!

முருகன் ஆலயம்

உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் வருவதற்கு நீங்கள் அவசியம்

திருசெந்தூர் ஆலயத்தில் தினமும் அதிகாலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்ன திருசெந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?

திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்
மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின் கொடிமரத்துக்குத்தான்
பூஜை நடைபெறும் .

இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற
சந்தன மரமாகும்

இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.

இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்

திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை

முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை.

காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர்.

உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர்.

திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர்.

அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர்.

அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்.

அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார்.

அம்மன் ‘மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள்.

அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே.

இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்.

உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.

இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும்.

அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார்.

ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார்.

அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்.

சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார்.

“நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது.

எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள்.

ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், “நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை.

விதி யாரை விட்டது.

அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு
மலைக்கு சென்றார்.

அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள்.

அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது.

ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை.

அலைந்து திரிந்து பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை.

எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர்.

அங்கு அற்புதமான நல்ல
உயரமான சந்தனமரம்
ஒன்று இருந்தது.

ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம்என்றார்.ஆறுமுக ஆசாரி.

அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர்.

அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது தெரிய வந்தது.

அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு தான் மரத்தினை வெட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.

முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர்.

மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார்.

கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது.

உடனே அந்த கோடாரி மரத்தை வெட்டிய 20 பேர்களின் கழுத்தில் பட்டது.

அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர்.

இதனால் ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்.

ஐயோ நான் என்ன செய்வேன்? என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார்.

அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

இதற்கிடையில் அந்த மரத்தில் இருந்த 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது.

உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார்.

அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்.

இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார்.

சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார்.

‘முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார்.

அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் நாங்கள் வசிப்பதற்கு இது போன்ற வேறு சந்தன கொடிமரம் இல்லை என்றும்,திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கொடிமரம பிரதிஷ்டை செய்யபட்ட பின்பு தங்களை தொடந்து இந்த கொடி மரத்திலேயே வாசம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தங்களுக்கு முதல் பூஜை நடத்திய பின்பே மூலவருக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொரி முத்தையனாரிடம் வேண்டினர்.

சொரி முத்தையனாரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும்
அந்த சந்தன மரத்தை அவர்களே வெட்டி அதை திருச்செந்தூரில் கொண்டு சேர்த்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அவர்களை அந்த கொடிமரத்திலேயே தொடந்து
வாசம் செய்து கொள்ளும்படியும் உத்தரவிட்டார்.

அதன்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள்.

பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள்.

அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது.

சொரி முத்தையனார் உத்திரவின்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இந்த கொடிமரத்தில. வாசம் செய்து வருகின்றனர்.

இப்போதும் திருச்செந்தூர் ஆலய்த்தில் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள்.

மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி சரி போகலாம் என்று கூறியவுடனேதான் தேர் நகரும்.

மேற்கண்ட தகவலை கொடி மரக்காவியம் என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.

இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா

திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது.

அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது.

ஆனால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி
21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விஷயம்ஏன்  என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது.

எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது.

சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான நடை திறக்கபட்டு நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை எல்லாம் நடைபெற்று வருகிறது..

தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெறும்போது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் நமஸ்காரம் செய்வார்கள்.

இதற்கான அனுமதி இலவசம்.

அதிகாலையில ் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!

இந்த கொடிமர பூஜையில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்.

நம்பிக்கையுடன் இந்த கொடிமர பூஜைக்கு போய் தான் பாருங்களேன்..!

Leave a Reply